Sunday, September 13, 2015

அடிப்படை வசதிகள் செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்கும் கிராமம் | Tirumangalam.com

திருமங்கலம் அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராமமக்கள் அறிவித்துள்ளனர்
திருமங்கலம் தாலுகா சித்தாலை அருகிலுள்ள குருவனந்தபுரத்தில், குடிநீர், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேர்தல் நேரத்தில் வாக்குச்சேகரிப்புக்கு வரும் வேட்பாளர்கள், அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளிக்கிறார்களே தவிர, தங்களுடைய கோரிக்கைகளை பதவிக்கு வந்த பின்பு நிறைவேற்றுவதில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படாவிட்டால், தேர்தலை புறக்கணிக்கப்போவதாக...

Guruvananthapuram village people of Thirumangalam Taluk announced a protest for not providing the basic needs sufficiently.. Read more

காமராசரால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு. என். எஸ். வி. சித்தன் | Tirumangalam.com

1973ல் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் முதன்முறையாக திரு. என். எஸ். வி. சித்தன் அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளராக முன்மொழிந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் திரு. காமராசர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1934ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 12ம் நாள் என். எஸ். வீரபத்திரத் தேவருக்கு மகனாகப் பிறந்தார். தனது பள்ளிக் கல்வியை திருமங்கலம் பி. கே. என். பள்ளியில் பயின்று, மதுரைக் கல்லூரியில் பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1959ல் சகுந்தலை என்பவரை திருமணம் முடித்தார். அவரது தகப்பனார், திரு. வீரபத்திரத் தேவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் தீவிரமாக ஈடுபட்டதால், சித்தனுக்கும் காங்., கட்சி மீது நாட்டம் ஏற்படவே கட்சியின் பல்வேறு போராட்டங்களில் பங்குகொண்டார். அதன் விளைவாக 1967ல் தமிழக சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டார். அதில் தன்னோடு போட்டியிட்ட இராஜாஜியின் சுதந்திரக் கட்சி வேட்பாளர் திரு. எம். பி. இராஜன் அவர்களை விட 3,257 வாக்குகள் அதிகம் பெற்று முதல் வெற்றி கண்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டத்தால் தமிழகத்தில் காங்., கட்சியின் செல்வாக்கு சரிவடைந்த (சொந்த ஊரான விருதுபட்டியில் காமராசரை தோற்கடிக்கப்பட்ட) அதே 1967ல் வெற்றி பெற்ற ஒரு சிலருள் ..

Thiru. NSV Chitthan, who was recommended for Dindigul Parliamentary Election 1973 by the former CM Thiru. Kamarasar. Read more

Thursday, September 10, 2015

துரித கட்டுமானப் பணிகள் நடைபெறும் திருமங்கலம் அரசு கலைக் கல்லூரி | Tirumangalam.com

திருமங்கலம் தியாகராசர் மில் எதிரே கட்டப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரிக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. எதிர்வரும் கல்வியாண்டுக்குள் முடிக்கப்பட்டு திறக்கப்படலாம்.
திருமங்கலம் மற்றும் அதன் தாலுகா மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி, தமிழக அரசால் கடந்த 2012ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒரு பகுதியாய் செயல்படத் துவங்கியது. மறுபுறம் கல்லூரிக்கான கட்டிடம் அமைக்க நிலங்கள் கப்பலூர், தியாகராசர் மில் எதிரே அரசு கால்நடை பராமரிப்பு அலுவலகத்தின் அருகே தெரிவு செய்யப்பட்டன. கட்டிடம் கட்ட 2014 ஆண்டு செப். 23ம் நாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மேலும் கல்லூரி கட்டுவதற்காக 7 கோடியே 25 லட்சம் ரூபாயும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. கட்டிடப்பணிகள் ஆரம்பித்து ஏறத்தாழ ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. எப்படியும் வரும் 2016 கல்வியாண்டிற்குள் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

The construction work for Thirumangalam Govt Arts College is in full swing. Read more

Wednesday, September 9, 2015

பள்ளி அருகே பாழடைந்த கிணறு, தண்ணீர்த் தொட்டி - அச்சத்தில் குழந்தைகள் | Tirumangalam.com

கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி எதிரே பாழடைந்த கிணறு, இடியும் நிலையில் உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டியால் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடியில் பழமையான ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. 2 ஆசிரியைகள், 32 குழந்தைகள் உள்ளனர். பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையமும் உள்ளது. இங்கு 20 குழந்தைகள் உள்ளனர். ஓடுகளால் வேயப்பட்ட கட்டடம் பழுதடைந்ததால், அதை அகற்றாமல் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது. பள்ளி எதிரே 30 அடி அகலம் கொண்ட பாழடைந்த கிணறு மூடப்படாமல் உள்ளது. அருகே இடியும் நிலையில் பயனற்ற மேல்நிலை தண்ணீர் தொட்டியும் உள்ளது. கிணற்றில் குப்பை, இறைச்சிகள் கொட்டப்படுவதால், குழந்தைகள் மூக்கை 'பிடிக்கும்' நிலை உள்ளது. அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

Kalligudi Primary School Students in afraid of the old well near school. Read more

மறவன்குளம் மெப்கோ தொழிற்சாலை அருகே வட்டமிடும் வவ்வால்கள் | Tirumangalam.com

இன்று காலை திருமங்கலத்திலிருந்து மறவன்குளம் வழியாக கடந்து சென்ற போது நடந்த தற்செயலான நிகழ்வு. முதலில் பறவைக் கூட்டம் என்று தான் நினைத்தேன். பின்பு தான் தெரிந்தது அது வவ்வால் கூட்டம் என்று!
Colony of Bats flied near Maravankulam Mepco Industry this morning. Read more

Tuesday, September 8, 2015

திருமங்கலத்தில் இரயில்வே பாலம் அமைக்க அரசிடம் எம்.எல்.ஏ கோரிக்கை | Tirumangalam.com

திருமங்கலத்தில் இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என எம். எல். ஏ சட்டமன்றத்தில் வேண்டுகோள்.
திருமங்கலம் நகரின் மையப்பகுதியில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் ஆறுமுக சாலையின் வழியில் ஒரு இரயில்வே கேட் உள்ளது. அதனைக் கடந்து தான் திருமங்கலத்தில் இருந்து ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்ல முடியும். மருத்துவமனை, கல்வி என எந்தவொரு காரியங்களுக்கும் திருமங்கலத்தை நம்பியுள்ள அந்த கிராமங்கள் இந்தக் இரயில்வே கதவைக் கடந்து தான் செல்ல முடியும். திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட ஏறத்தாழ 30 விழுக்காட்டு மக்கள் இதனைக் கடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் மதுரை - நெல்லை இரயில்வே வழித்தடத்தில் ஒரு நாளிற்கு ஏறத்தாழ 20க்கும் .. Read more

Monday, September 7, 2015

அரசு ஓமியோபதி கல்லூரி விடுதியை முதலமைச்சர் திறந்து வைத்தார் | Tirumangalam.com

திருமங்கலத்தில் அமைந்திருக்கும் அரசு ஓமியோபதி கல்லூரியின் ஆண்கள் விடுதி, நவீன சமையல் கூடம் மற்றும் பார்வையாளர்கள் காத்திருக்கும் கூடம் ஆகியவற்றை இன்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்
திருமங்கலம் அரசு ஓமியோபதி கல்லூரி, தமிழகத்தில் செயல்படும் ஒரே அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியாகும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஓமியோபதி மருத்துவம் பயின்று வருகின்றனர். இங்கு தங்கிப் பயிலும் மாணவர்களுக்கென புதிதாய் மாணவர் விடுதி கட்டப்பட்டது. அதனோடு நவீன சமையல் கூடம் மற்றும் பார்வையாளர்கள் காத்திருக்கும் கூடம் ஆகியவை 1 கோடியே 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அதனை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. முத்துராமலிங்கம், திருமங்கலம் நகராட்சி துணைத் தலைவர் திரு. சதீஸ் சண்முகம், திருமங்கலம் நகர் அ.இ.அ.தி.மு.க. கிளைச் செயலாளர் திரு. JD. விஜயன் மற்றும.. Read more

உழைத்துக் களைத்தவன் இளைப்பாறும் திருமங்கலம் தூங்குமூஞ்சி மண்டபம் | Tirumangalam.com

திருமங்கலத்தில் தூங்குமூஞ்சி மண்டபம் பற்றி கேள்வி பட்டிருக்கீங்களா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்
சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாய் குண்டாற்றின் மேற்குக் கரையில், காட்டு பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில், பசுமை சூழ அமைந்துள்ளது இந்த தூங்குமூஞ்சி மண்டபம். குண்டாற்றை நம்பி விவசாயம் நடந்து வந்த காலத்தில், வயலில் வேலை செய்து களைப்பாய் வரும் விவசாயிகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் இளைப்பாற ஏற்ற இடமாக இருந்தது. யாராக இருந்தாலும் இங்கு வந்து அமர்ந்த ஐந்து நிமிடங்களில் தூங்கிவிடுவார்களாம். இங்கு உள்ள கிணற்றில், மோந்து குடிக்கும் அளவிற்கு நீர் இருக்குமாம். காலப்போக்கில் ஆற்றில் நீர் வராததால் விவசாயமும் குறைந்தது, தற்போது இந்த இடம் குண்டாறு ஊற்று.. Read more

Sunday, September 6, 2015

அந்நிய படையெடுப்பினால் அழிந்துபோன கோட்டைமேடு கிராமம் | Tirumangalam.com

தொடர்ச்சியான அந்நியர்களின் படையெடுப்பினால் மொத்தமும் அழிந்துபோன கோட்டைமேடு கிராமம்
திருமங்கலம் அருகே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அந்நியர்களின் படையெடுப்பினால் அழிக்கப்பட்ட கிராமம் தான் கோட்டைமேடு. திருமங்கலம் வட்டம் நேசனேரி கிராமத்தின் வடக்கே வயல்வெளிகளின் நடுவில் சுமார் 50ஏக்கர் பரப்பளவில் ஆளுயர கோட்டைச் சுவர் எழுப்பி, மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களில் ஒருவர் இங்கு கோட்டை போன்று அமைத்ததாக கூறப்படுகின்றது. இதனைச் சுற்றியுள்ள மீனாட்சிபுரம், கரிசல்களாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் தாய் கிராமமாக விளங்கியது. மழை வெள்ளம் ஏற்படும் காலங்களில் மக்கள் இங்கு தான் தஞ்சம் புகுவார்களாம். பின்னர் மதுரை மீது படையெடுத்த மாலிக் கபூரினால் தான் இந்த கோட்டையும் அழிக்கப்பட்டது என சுற்றியுள்ள ஊர் மக்கள் தெரிவித்தனர். இன்றும், இப்பகுதியில் சென்றால் முதுமக்கள் தாழி, மண்பாண்டங்கள் போன்றவை காலில் தட்டுப்படும். Read more

Saturday, September 5, 2015

கல்விக்காக தன்னையே அர்பணித்த தலைமை ஆசிரியர் திரு. அருணாசலம் | Tirumangalam.com

காமராசர் முதலைச்சராக பொறுப்பேற்றதும் தமிழகத்தில் புதிய கல்விமுறையைக் அமைக்க ஐவர் கமிட்டியை உருவாக்கினார். அதில் ஒருவரான நம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலையாசிரியர் திரு. மா. அருணாசலம் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
திரு. மா. அருணாசலம் அவர்கள், 1912ம் ஆண்டு அக்டோபர் 14ம் நாள் மாரியப்ப நாடார் பூவாயியம்மாள் ஆகியோருக்கு மகனாக விருதுநகரில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை விருதுநகர் கே. வி. எஸ் பள்ளியிலும் பட்டப் படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும், Literature of Teaching படிப்பை செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் முடித்து பொருளியல் துறையின் பட்ட மேற்படிப்பில் சென்னை மாகாண அளவில் இரண்டாமிடம் பெற்றார். பின்னர் இந்தியக் குடிமைப் பணியில் (Indian Civil Service) தேர்வானார். ஆனால் அவர் படித்த விருதுநகர் கே. வி. எஸ். பள்ளியில் உதவி தலைமையாசிரியர் பணி கிடைக்கவே அங்கு மாற்றலானார்.. Read more

Friday, September 4, 2015

வரலாறு சொல்லும் திருமங்கலம் இரயில் நிலைய தண்ணீர் தொட்டி | Tirumangalam.com

எப்போதாவது நம்ம ரயில் நிலையத்திற்கு செல்லும் போது இந்த தொட்டியை பார்த்திருப்பீர்கள். ஆனால் அது என்ன? எதற்கு பயன்பட்டது? எப்போது கட்டப்பட்டது என யோசித்ததுண்டா? தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் கீழ் 1875ம் ஆண்டு மதுரையில் இரயில்வே போக்குவரத்து துவங்கியது. அதற்கடுத்த ஆண்டிலேயே அதாவது 1876ல் திருமங்கலத்தில் புதிய இரயில் நிலையம் அமைக்கப்பட்டது. எதிர்காலத்தில் பெருகவிருகும் மதுரையின் மககள் தொகையைக் கணக்கிற்கொண்டு, முதற்கட்டமாக மதுரையிலுள்ள இரயில் நிலையங்களின் நிலை உயர்த்தப்பட்டது. அவ்வாறு ஆங்கிலேயர் ஆட்சியில் மதுரையிலிருந்து திருமங்கலம் வழியாக மற்றும் தென்தமிழகத்திலிருந்து மதுரைக்கு வரும் அனைத்து அக்கால நீராவி எஞ்சின்களுக்கும் நீர்பிடிப்பு பகுதியாக நீர்வளமிக்க திருமங்கலத்தை தெரிவு செய்தனர் ஆங்கிலேயர்கள். நீராவி என்ஜின்களில் நீர்பிடிப்பிற்காக அதற்குண்டான கருவிகள் மற்றும் இந்த தொட்டியையும் நிறுவினர். தற்போது டீசல் எஞ்சின்கள் புழக்கத்தில் வந்ததால் இதன் பயன்பாடு இழந்து ஆங்கிலேயர் ஆட்சியின் அடையாளமாய் நிற்கிறது.

For more details, click here

Thursday, September 3, 2015

திருமங்கலம் மீனாட்சி கோயில் கும்பாபிசேகம் எப்போது நடக்கும்? | Tirumangalam.com

திருமங்கலம் மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிசேகப் பணிகளுக்கு அரசிடமிருந்து போதிய நிதி இல்லாததால் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு, திருமாங்கல்யம் செய்து கொடுக்கப்பட்டதாக நம்பப்படும் திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் 12 ஆண்டுகளை கடந்தும் கும்பாபிசேகம் நடக்கவில்லை. இந்தாண்டு தொடக்கத்தில், உபயதாரர்களால் மராமத்து பணிகள் துவங்கின. கோயிலுக்குள் புதிய மண்டபம் ஒன்றும் அமைக்கப்பட்டது. தற்போது மராமத்து பணி, சிலைகளுக்கு வர்ணம் தீட்டி புதுப்பிப்பது போன்ற பணிகளுக்கு போதிய நிதி இல்லை. தமிழக அரசிடமிருந்தும் எந்தவொரு அறிவிப்போ, போதிய நிதி ஒதுக்கீடோ இல்லை. நிதி ஒதுக்காததால் கும்பாபிசேக பணி தாமதமாகிறது. நிர்வாக அலுவலர் மாலதி கூறுகையில், ''விரைவில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கோயில் தெப்பக்குளம் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான ஆவணம் கிடைத்தவுடன், அதுவும் மீட்கப்படும்'' என்றார். விரைவில் அரசிடமிருந்து நற்செய்தி வரும் என எதிர்பார்கின்றோம். மேலும் படிக்க

Thirumangalam Meenakshi amman temple Kumbabishegam works stopped due to insufficient money.

Wednesday, September 2, 2015

சேடபட்டி, சென்னம்பட்டி, கோட்டைப்பட்டியில் நாளை மின்தடை நேர அறிவிப்பு | Tirumangalam.com

சேடபட்டி, சின்னக்கட்டளை, சென்னம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நாளை (செப். 3) மின்தடை
நாளை (செப். 3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், மங்கல்ரேவு, எஸ். கோட்டைப்பட்டி, கணவாய்ப்பட்டி, சந்தைப்பட்டி, வகுரணி,, அயோத்திப்பட்டி, அல்லிகுண்டம், கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம்பரணி, சென்னம்பட்டி, பரமன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவல்சேரி, கே.ஆண்டிப்பட்டி, வீராணம்பட்டி, தொட்டனம்பட்டி, ஜம்பலப்புரம், கேத்துவார்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது மேலும் படிக்க

There will be a power shutdown in Sedapatti, Chinnakattalai, sennampatti, s.kottaippatti, mangalrev, perungamanallur, jambalapuram, k.andipatti and its surroundings

Tuesday, September 1, 2015

நகராட்சி துப்புரவாளர்கள் வேலை நிறுத்தத்தால் நாறுது திருமங்கலம் | Tirumangalam.com

திருமங்கலம், மேலுார் துப்புரவு தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், குப்பை அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது




மே தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி விடுமுறை நாட்களுக்கு முழு நேர விடுப்பு வழங்குதல், சஸ்பெண்ட் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு, பழிவாங்கும் போக்கை கைவிடல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மேலுார், திருமங்கலம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.மதுரை கோச்சடையில் நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சம்மேளன மாநில குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இயக்குனர் (பொறுப்பு) கனகராஜிடம் மனு அளித்தனர். ராமசாமி கூறியதாவது: மேலுார், திருமங்கலம் நகராட்சிகளில், துப்புரவு பணிக்கு தலா 250 முதல் 300 பேர் தேவை. மேலுாரில் 58 பேர், திருமங்கலத்தில் 80 பேர் மட்டுமே உள்ளனர். விடுப்பில் செல்பவர்களை கழித்தால் பணியில் இருப்பவர்கள் சொற்பமே. துப்புரவு பணியாளர்களுக்கான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. பேச்சுவார்த்தைக்கு இன்று (செப்.,1) வரும்படி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார் என்றார். மேலுார், திருமங்கலத்தில் குப்பை அள்ளாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்ற நகராட்சி கமிஷனர்கள் சுருளிநாதன், அப்துல்ரஷீத் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். பணியாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றனர்.
மேலும் படிக்க

Monday, August 31, 2015

40 ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடைத் திட்டம் கண்ட திருமங்கலம் | Tirumangalam.com

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடைத் திட்டம் கண்ட நம்ம திருமங்கலம்





1970களின் இறுதியில் தமிழகத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.. அதனைத் தொடர்ந்து நம்ம திருமங்கலத்திலும் பாதாள சாக்கடைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திருமங்கல நகரின் அன்றைய முக்கிய வீதிகளான பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, பூச்சியார் தெரு, பசும்பொன் தெரு, காமராசர் தெரு ஆகியவற்றை இணைத்து திட்டம் உருவாக்கி செயல்படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அந்தந்த தெரு சந்திப்புகளில் அன்றைய காலத்து இரும்பு மூடிகள் தென்பட்டன. மேலும் படிக்க

Saturday, August 29, 2015

திருமங்கலம் பி.கே.என். பள்ளியின் பழைய புகைப்படங்களின் தொகுப்பு | Tirumangalam.com

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நூற்றாண்டு கண்ட பள்ளியான பி.கே.என் பள்ளியின் அழகிய பழைய அரிய புகைப்படத் தொகுப்பு கட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனைச் சேகரித்து வழங்கிய திரு. சிவ சித்தார்த்தன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். இது போன்று தங்களிடமும் நம் திருமங்கலம் நகரின் பழைய புகைப்படத் தொகுப்புகள் இருப்பின் எங்களுக்கு அனுப்புங்கள். தங்களின் பெயருடன் நமது Tirumangalam.com இணைய தளத்தில் பதிவிடப்படும். தங்களது புகைப்படங்களை admin@tirumangalam.com எனும் இணையதள முகவரிக்கு அனுப்புங்கள்.

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

Friday, August 28, 2015

திருமங்கலம் நகர் மற்றும் தாலுகாவில் நாளை மின்தடை அறிவிப்பு | Tirumangalam.com

திருமங்கலம் துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் திருமங்கலம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டரங்களில் நாளை (ஆக. 29) மின்தடை.
ிருமங்கலம் துணை மின்நிலையத்தில் வரும் 29ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருமங்கலம் நகர், உலகாணி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி, சித்தாலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது Read more

There will be a power shutdown in Tirumangalam, Ulagani, Sivarakottai, Melakottai, Mykudi, Sitthalai, Sathangudi, Puthupatti, Alampatti, Achampatti and its surroundings

Wednesday, August 26, 2015

திருமங்கலம் கக்கன் காலனி ஓடையில் பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம் | Tirumangalam.com

திருமங்கலம் கக்கன் காலனி ஓடை பகுதியில் நடைபாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறை தலையிட்டு சமாதானம் செய்தனர்.


திருமங்கலம் மறவன்குளம் கண்மாய் - குண்டாற்றை இணைக்கும் கால்வாயை சீர்செய்யும் பணி 11 கோடி ரூபாய் செலவில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றது.. இந்த கால்வாயை தாண்டித்தான் கக்கன் காலனி பகுதிக்கு செல்ல முடியும். கால்வாய் பணியின் காரணமாக இந்த பகுதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. கக்கன் காலனிக்கு நடந்து செல்ல ஆளுயர கால்வாய் தடுப்புச் சுவர் வழியாக இறங்கித் தான் செல்ல முடியும். ஆனால் வண்டியில் செல்ல என்.ஜி/ஓ. காலனி பாலம் வரை சுற்றிச் செல்ல வேண்டும். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் ஏற்பட்டது. கால்வாயை கடக்க கக்கன் காலனிக்கு புதிதாய் நடை பாலம் அமைத்துத் தரக்கோரி பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரியுள்ளனர். ஏற்கனவே பலமுறை போராட்டமும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் பாலம் அமைத்துத் தரக்கோரி இன்று காலை மீண்டும் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனம் செய்தனர். கக்கன் காலனி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நடை பாலம் அமையுமா? Read more



Tirumangalam Kakkan colony people protesting for a bridge across Maravankulam - Gundar canal.

திருமங்கலத்தில் ஏறத்தாழ 40 ஆண்டு காலமாய் நாத்திகரின் எதிரே ஆத்திகர் | Tirumangalam.com

தமிழகத்தின் (ஏன்.. இந்த உலகத்தில்) எங்கு சென்றாலும் காணக்கிடைக்கா பொக்கிஷம், திருமங்கலத்தில் அமைதியாய் ஏறத்தாழ 40 ஆண்டு காலமாய் உள்ளது.


இந்து மத கோட்பாடுகள் மற்றும் அதன் உணர்வுகளை தன உயிரினும் மேலாக மதித்து ஆத்திகராய் வாழ்ந்தவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. இராசகோபாலாச்சாரி (இராசாசி). ஆனால் அதற்கு நேர்மறையான சிந்தனை கொண்டு கடவுள் மறுப்பு இயக்கத்தைத் தலைமை தாங்கியவர் ஈ.வெ.இரா. பெரியார் அவர்கள். கொள்கைகளின் அடிப்படையில் இவ்விருவருமே வெவ்வேறு துருவங்களாய் நின்றவர்கள். அப்படிப்பட்ட இவர்களை திருமங்கலம் - மதுரை சாலையில் (திருமங்கலம் புறநகர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே) நேரிதிரே சிலைகளாய் நிற்க வைத்தனர். இச்சிலைகள் நிறுவப்பட்டு ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்றும் நீடித்து நிற்கின்றன. Read more

The Theist Mr Rajaji's statue infront of Atheist Mr. EVR Periyar's stuate in Tirumangalam

Tuesday, August 25, 2015

மதுரை மாவட்டத்தின் முதல் பன்னீர் சோடா தயாரித்த திருமங்கலம் வீனஸ் சோடா | Tirumangalam.com

மதுரை மாவட்டத்தில் பொன்விழா கண்டு தலைமுறை தாண்டி இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே கோலி சோடா நிறுவனம் நம்ம திருமங்கலம் வீனஸ் சோடா கம்பெனி என்பது எதனை பேருக்குத் தெரியும்? தெரிந்து கொள்ளுங்கள்.


திருமங்கலத்தில் ஆர். ஜெயமணி அவர்களின் முயற்சியால் தனது மாமாவின் சோடா கம்பெனியில் அனுபவம் பெற்று திருமங்கலத்தில் ஒரு சோடா கம்பெனியை ஆரம்பிக்கும் எண்ணம் தோன்றியது. அதற்காக தனது மனைவி திருமணத்திற்கு சீதனமாக கொண்டு வந்த 60 பவுன் நகை மற்றும் வீட்டிலுள்ள ஆடு மாடு கோழி என அனைத்தையும் விற்று 1957ம் ஆண்டு சூலை மாதம் 7ம் நாள் ரூ.2000 முதலீடாகக் கொண்டு வீனஸ் சோடா கம்பெனி என்ற ஒரு சிறு தொழிலாக திருமங்கலம் திருவள்ளுவர் தெருவில் செட்டியார் காம்பவுன்டில் ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் வெறும் கோலி சோடா மட்டும் தயாரிக்கப்பட்டு 1 சோடா, 1 அனாவிற்கு (6 காசுகள்) விற்கப்பட்டது. சோடாவின் தரத்தால், மக்கள் மத்தியில் வீனஸ் சோடா நற்பெயர் எடுக்க ஆரம்பித்தது. Read more


Madurai district's first corbonated rosewater soda was prepared by Thirumangalam Venus Soda Company

Monday, August 24, 2015

மறவன்குளம் அருகே ஓடும் இரயிலில் எட்டுப் பெட்டிகள் பிரிந்தது | Tirumangalam.com

திருமங்கலம் அருகே மறவன்குளம் அருகே ஓடும் இரயிலில் எட்டுப் பெட்டிகள் கழண்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி மாவட்டம் மீளவட்டானுக்கு சரக்கு ரயில் ஒன்று நேற்று காலை  சென்றது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மறவன்குளம் அருகே சென்றபோது பின்னால் இருந்த 8 பெட்டிகள் தனியாக பிரிந்து நின்றன.  இதையடுத்து டிரைவர் ரயிலை நிறுத்தினார்.  தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவ்வழியகா வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மதுரையில் இருந்து ரயில்வே ஊழியர்கள் வந்து பழுதாகி நின்ற சரக்கு பெட்டிகளை சரி செய்து, திருமங்கலம் ரயில் நிலையத்துக்கு  மெதுவாக  ஓட்டிச் சென்றனர். இதனை தொடர்ந்து நெல்லையில் இருந்து ஈரோடு மற்றும் மயிலாடுதுறைக்கு செல்லும் பயணிகள் ரயில், செங்கோட்டை - மதுரை  உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் சுமார் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு மதுரைக்குச் சென்றன.


Sensation near Thirumangalam 8 Compartments in a moving freight train gone split

For more details, Click here

Saturday, August 15, 2015

உச்சபட்டி நடுநிலைப் பள்ளியில் விடுதலை நாள் விழா கொண்டாட்டங்கள் | Tirumangalam.com

திருமங்கலம் வட்டம் உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 69வது விடுதலை நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.


பள்ளித் தலைமையாசிரியை திருமதி.சாந்தி அவர்கள் வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கார்த்திகேயன் அவர்கள் கொடியேற்றி வைத்தார். மேலும் GAINTS அறகட்டளை தலைவர் திரு. மாதவன் அவர்கள் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்சிகள் சிறப்பாக நடைபெற்றன. விழாவில் பெற்றோர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Indian Independence Day has been celebrated in Uchapatti, Tirumangalam

For more details, Click here

Thursday, August 13, 2015

திருமங்கலம் அரசுப் பொது மருத்துவமனைக்கு புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை | Tirumangalam.com

திருமங்கலம் அரசுப் பொது மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது.


பச்சிளம் குழந்தைகள் உயிர்காக்கும் இன்குபேட்டர் கருவி, மானிட்டர் மற்றும் பல்வேறு வசதிகளோடு ரூ. 12 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் வழங்கும் விழாவை அமைச்சர் திரு. செல்லூர் ராஜு தலைமை வகித்து மருத்துவமனைக்கு வழங்கினார். இவ்விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சுப்பிரமணியன், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. முத்துராமலிங்கம், மருத்துவ இணை இயக்குனர் மாலதி, திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு. பூமிநாதன், 108 ஆம்புலன்ஸ் மதுரை மண்டல மேலாளர் திரு. ஜீவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.



Rs. 12 Lakhs worth of new Ambulance for infant babies has been bought in Tirumangalam Govt Hospital.

For more details, Click here

Wednesday, August 12, 2015

100 நாள் வேலை திட்டத்தில் கூலி வழங்காததால் மக்கள் சாலை மறியல் | Tirumangalam.com

திருமங்கலத்தில் இன்று காலை 100 நாள் வேலை திட்டத்தில் கூலி முறையாக வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மேலக்கோட்டையிலிருந்து ஜிம்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிள் | Tirumangalam.com

ஜிம்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிளின் சொந்த ஊர், நம்ம திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டை தானாம்.


1980கள் மற்றும் 90களில் கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் நடித்தவர்களுள் ஒருவர் சுப்பையா. அக்காலத்தில் திரைத்துறையில் சுப்பையா என்று ஏற்கனவே இரண்டு பேர் இருந்ததால் இவரின் நிறத்தை வைத்து கருப்பு சுப்பையா என்று அழைக்கப்பட்டார். (மற்றொருவர் வெள்ளை சுப்பையா) 1980கள் மற்றும் 90களில் கவுண்டமணியுடனே ஏறத்தாழ 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலங்களில் எங்க ஊர் பாட்டுக்காரன், திருமதி பழனிச்சாமி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தாலும் பின்னர் வந்த படங்களான பெரிய மருது, செந்தூரப்பூவே, பட்டத்துராணி, ஜல்லிக்கட்டுக் காளை, கட்டபொம்மன் ஆகிய படங்களின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதிலும் ஜல்லிக்கட்டுக் காளை படத்தில் வரும் ஜம்பலக்கடி பம்பா எனும் கதாபாத்திரம், பெரிய மருது படத்தில் வரும் அண்டாவுக்கு ஈயம் பூசும் கதாபாத்திரம், கட்டபொம்மன் படத்தில் ஆயிரம் மூட்டை நெல் அரவை செய்ய வரும் கதாபாத்திரம் ஆகியவை இன்றைய இளைஞர்கள் முதற்கொண்டு இரசிக்கின்றனர்.


இவரது கடைசி காலங்களில் மிகவும் நோய்வாய்ப் பட்டு கடந்த 2013ம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரது சொந்த ஊர் - திருமங்கலம் தாலுகா, மேலக்கோட்டை கிராமம்.

For more details, Click here

Tuesday, August 11, 2015

இனி எந்த மின்சார வாரியத்திலும் மின் கட்டணம் செலுத்தலாம் | Tirumangalam.com

:தமிழகத்தில் எந்த நகரத்திலுள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்தும் கரண்ட் பில் கட்டும் முறை திருமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் நேற்று முதல் செயல்படத்துவங்கியது



தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு மண்டலத்திற்குள் கரண்ட் பில் அந்தந்த மண்டலத்திற்குரிய மின்வாரிய அலுவலகத்தில் மட்டுமே கட்டும் முறை இதுவரை நடைமுறையில் உள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலமாக எந்த இடத்திற்கும் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்கனவே உள்ளது. திருமங்கலத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன், மின் விநியோக சீரமைப்பு திட்டத்தின் கீழ், புதிய மென் பொருள் மூலம் புதிய கணக்கீடு மற்றும் வசூல் பணிகள் துவக்கப்பட்டன.இதன் மூலம் எந்த மின்வாரிய அலுவலகத்திலும் மின் கட்டணம் செலுத்த முடியும்.. இந்த சாப்ட்வேர் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி மற்றும் திருமங்கலம்,  மேலூர், உசிலம்பட்டி ஆகிய மூன்று நகராட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. மதுரை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் நல்லம்மாள் துவக்கிவைத்தார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஈஸ்வர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் மகாராஜன், உதவி பொறியாளர்கள் பாலமுருகன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


For more details: Read here

Monday, August 10, 2015

திருமங்கலத்தில் திமுக.வினரின் மதுவிலக்கு அறவழிப் போராட்டம் | Tirumangalam.com


மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி திருமங்கலத்தில் திமுகவினர் அறவழிப் போராட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி திமுகவின் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட சார்பில் இன்று காலை 10 மணியளவில் திருமங்கலம் தேவர் சிலை அருகே அறவழிப் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் திரு. பி. மூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார். மேலும் திரு.சேடபட்டி முத்தையா, திரு.மணிமாறன் மற்றும் திமுகவினர் பலர் பங்கேற்றனர்.

For more details read here
www.tirumangalam.com

திமுகவின் போராட்டத்தால் 3கிமீ பொதுமக்கள் நடந்து சென்ற அவலம் | Tirumangalam.com

திருமங்கலத்தில் திமுக நடத்திய மதுவிலக்குப் போராட்டத்தால் மதுரையிலிருந்து பேருந்தில் திருமங்கலம் வந்த பொதுமக்களை மறவன்குளம் நான்கு வழிச்சாலையில் இறக்கிவிடப்பட்டு, சுமார் 3 கிமீ நடந்து சென்றனர்


தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி திமுகவின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் திரு. பி. மூர்த்தி அவர்களின் தலைமையில் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட சார்பில் இன்று காலை 10 மணியளவில் திருமங்கலம் தேவர் சிலை அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறவழிப் போராட்டம் நடந்தது. இதனால் திருமங்கலம் தேவர் சிலை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த வெளியூரிலிருந்து திருமங்கலம் வரும் பேருந்துகள் அனைத்தும் திருமங்கலம் வெளிவட்டச் சாலை (பைபாஸ்) மூலம் திருப்பிவிடப்பட்டது. மதுரையிலிருந்து திருமங்கலம் வரை வரும் நகரப் பேருந்துகள் அனைத்தும் மறவன்குளம் நான்கு வழிச்சாலை பாலம் அருகே நிறுத்தப்பட்டது. அதில் வந்த பொதுமக்கள் அனைவரையும் அங்கேயே இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து திருமங்கலம் பேருந்துநிலையம் வரை சுமார் 3 கிமீ தூரம் தங்களது உடைமைகளை தூக்கிக்கொண்டு நடந்து சென்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

For more details read here
www.tirumangalam.com

Sunday, August 9, 2015

கவனிப்பாரற்று கிடக்கும் தாலுகாவின் முதல் தேசியக் கொடி ஏற்றிய கம்பம் | Tirumangalam.com

திருமங்கலம் தாலுகாவில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றப்பட்ட கொடிக்கம்பம் கவனிப்பாரற்று கிடக்கின்றது.





1947ம் ஆண்டு ஆகத்து மாதம் 15ம் நாள் இந்திய நாடு சுதந்திரம் அடைந்தது. அதனைக் கொண்டாடும் வகையில் இந்திய நகரங்கள், கிராமங்கள் என எல்லா இடங்களிலும் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அவ்வாறு நம் திருமங்கலம் தாலுகாவின் (இன்றைய திருமங்கலம் தாலுகா & பேரையூர் தாலுகா) முதன்முறையாக தேசியக் கொடி திருமங்கலம் நகராட்சி அலுவலக வளாகத்தில் (தற்போதைய திருமங்கலம் அரசு பொது மருத்துவமனை) ஏற்றப்பட்டு அனுசரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளிலும் திருமங்கலம் நகராட்சித் தலைவர் இந்திய சுதந்திர நாளன்று தேசியக் கொடி ஏற்றுவது வழக்கமாய் இருந்து வந்தது. 1970களின் இறுதியில் நகராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பழைய கொடிக்கம்பத்தில் கொடியேற்றுவது நிறுத்தப்பட்டது. தற்போதைய திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் பின் பகுதியில் கம்பம் மறைவாக உள்ளதால் பெரும்பாலும் பொதுமக்கள் இதனை கவனிப்பதில்லை.

இன்று அக்கொடிக்கம்பமும் வெறும் கல்வெட்டையும், நினைவுகளையும் சுமந்து நிற்கிறது. எதிர்வரும் சுதந்திர நாளில் இதனை கண்டுகொள்ளுமா திருமங்கலம் நகராட்சி?

For more details read here
www.tirumangalam.com

Thursday, July 30, 2015

திரு.அப்துல்கலாம் மறைவினால் வெறிச்சோடிய திருமங்கலத்து வீதிகள் | Tirumangalam.com

எப்போதும் பரபரப்பாக இயங்கும் திருமங்கலத்து வீதிகள் திரு. அப்துல்கலாம் மறைவினால் வெறிச்சோடின

 



மதுரையிலிருந்து அனேக தென் மாவட்டகள் மற்றும் தெற்கு கேரளம் ஆகியவற்றிற்கு செல்ல திருமங்கலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். அதனால் திருமங்கலத்தின் மதுரை, விருதுநகர் மற்றும் கடைவீதிகள் நிறைந்திருக்கும் உசிலம்பட்டி ஆகிய சாலை எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். திரு. அப்துல்கலாமின் மறைவையொட்டி திருமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்கம் அழைப்பு விடுத்ததன் பேரில் திருமங்கலத்தில் அனைத்து கடைகளும் இன்று முழு அடைப்பு செய்யப்பட்டது. துணிக்கடை, பலசரக்குக்கடை, நகைக்கடை, பாத்திரக்கடை, பேன்சி ஷாப்கள் என அனைத்தும் மூடப்பட்டன. திருமங்கலத்தின் அனைத்து வியாபாரிகளும் பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு அளித்தனர்.
மேலும் அறிய
Tirumangalam.com

திரு.அப்துல்கலாமின் மறைவிற்கு திருமங்கலத்தில் முழு கடையடைப்பு | Tirumangalam.com

திரு.அப்துல்கலாம் மறைவையொட்டி திருமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் முழு கடையடைப்பு



 இந்தியக் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் அவர்களின் மறைவையொட்டி திருமங்கலம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று (வியாழக்கிழமை) முழு கடையடைப்பு.
மேலும் அறிய

Tirumangalam.com

Tuesday, July 21, 2015

சிவரக்கோட்டை - ஆபத்தின் விளிம்பில் திருமங்கலத்தின் சிறு தானிய களஞ்சியம் | Tirumangalam.com



திருமங்கலம் வட்டம் சிவரக்கோட்டை கிராமம் சிறுதானியங்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று சிறுதானிய களஞ்சியமாக திகழ்கிறது. ஆனால் அதற்கு பெரும் ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது. சிவரக்கோட்டை ஊரணியைச் சுற்றிலும் கண்ணில் படும் தூரமெல்லாம் ஏறத்தாழ 70 வகையான தானியங்கள் விளைய வைக்க கூடிய கரிசக்காடு. இன்றும் திணை, துவரை, வரகு, உளுந்து, கம்பு, பாசிப்பயறு, கேழ்வரகு, தட்டைப்பயறு, குதிரைவாலி, மொச்சை, சோளம், கொள்ளு, மக்காச்சோளம், சுண்டல், சாமை, வெண்டி, மல்லி, கொத்தவரை, எள், மொச்சைக்காய், ஆமணக்கு, பீர்க்கை, ஓமம், பருத்தி, அவுரி, வேம்பு, நித்யகல்யாணி, புளி என 30க்கும் மேற்பட்ட வகையான பயிர்கள் ரசாயன உரமில்லாமல் பயிரடப்படுகின்றன. ஆனால் இதற்கு பேராபத்து வருகிறது கிட்டத்தட்ட 4000 ஏக்கர் விவசாய நிலப்பரப்பை தரிசு நிலம் எனக் கூறி விவசாயிகளிடம் அபகரித்து சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்க அரசு தயராகி வருகிறது. இதை கேட்டவுடன். அந்த ஊர் பெரியவர் இராமலிங்கம் அவர்களின் குமுறல்கள் இவை. ஊர் மக்களோடு போராடி வருகிறார். இளைஞர்களை பார்த்ததும் அவர் முகத்தில் அவ்வளவு சந்தோசம். இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நீர் இருக்கும் விவசாய நிலங்களையே குறி வைக்கின்றனர் அரசும் உடந்தை. நிலத்தை இவர்களிடம் கொடுத்த விட்டு விவசாயிகள் என்ன செய்வர்? வேலை கூட கொடுக்க மாட்டான். படிக்காதவன் எனக்கூறி அவன் கம்பெனியில் அதிகபட்சமாக காவல் காக்கும் வேலையும், கழிவறை கழுவும் வேலையும் கிடைக்கும்.  நீர்நிலை குறித்தான தவறான தகவல்கள் வெளியிடுதல் என ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் முரண்பட்டு செயல்படுகின்றனர். இதனால் எதனை சாதிக்கப் போகிறார்கள் என்பதற்கு “சிப்காட்” (SIPCOT) அதாவது சிறப்பு பொருளாதார மண்டலம்.

Tirumangalam taluk Sivarakottai's wealthy farm lands are going to be a rustic SIPCOT
For news in detail: www.tirumangalam.com/

Sunday, July 19, 2015

கே.டி.கே. தங்கமணி - திருமங்கலத்தில் பிறந்த பொதுவுடைமைவாதி | Tirumangalam.com

கே.டி.கே. தங்கமணி - திருமங்கலத்தில் பிறந்த பொதுவுடைமைவாதி



இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவராகவும்., இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர் மற்றும். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் இருந்த கே.டி.கே. தங்கமணி, (மே 19, 1914 - டிசம்பர் 26, 2001)) மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்தவர்.  திருமங்கலம் பெருவணிகர் கே.டி. கூளையநாடார் - காளியம்மாளுக்கு 1914ம் ஆண்டு மே 19ம் நாள் இரண்டாவது மகனாக கே.டி.கே. தங்கமணி பிறந்தார். கே.டி. கூளைய நாடார், பெரும் செல்வந்தர், ஏற்றுமதி, இறக்குமதி வணிகர். இவரும் ஈ.வெ.ரா. பெரியாரின் தந்தையும் கூட்டாக வணிகம் செய்து வந்தவர்கள்... மேலும் படிக்க

Thursday, May 14, 2015

அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா 2015 | Tirumangalam.com

மதுரை மாவட்டம் திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா, மே 24ம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது.


மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரின் தெற்கு குண்டாற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் 13 நாட்கள் நடக்கும் வைகாசி திருவிழா பிரசித்தம். திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலை மாலை இரு வேளைகளில் மாரியம்மன் நகர்வலம் வந்து அருள்பாலிப்பார். குறிப்பாக
5ம் நாள் குதிரையோட்டம், 6ம் நாள் சமணர் கழுவேற்றம், 7ம் நாள் பூப்பல்லக்கு, 9ம் நாள் முளைப்பாரி, 10ம் நாள் சூரசம்ஹாரம், 13ம் நாள் ஆயிரம்பொன் சப்பரத்தில் குண்டாற்றில் எழுந்தருளல்
ஆகியவை சிறப்பாகும். வைகாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற ஞாயிறன்று திருவிழா துவங்கும் அதாவது இந்தாண்டு, வருகின்ற மே 24ம் கொடியேற்றத்துடன் 13 நாள் வைகாசி திருவிழா துவங்கவுள்ளது.