Monday, August 10, 2015

திமுகவின் போராட்டத்தால் 3கிமீ பொதுமக்கள் நடந்து சென்ற அவலம் | Tirumangalam.com

திருமங்கலத்தில் திமுக நடத்திய மதுவிலக்குப் போராட்டத்தால் மதுரையிலிருந்து பேருந்தில் திருமங்கலம் வந்த பொதுமக்களை மறவன்குளம் நான்கு வழிச்சாலையில் இறக்கிவிடப்பட்டு, சுமார் 3 கிமீ நடந்து சென்றனர்


தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி திமுகவின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் திரு. பி. மூர்த்தி அவர்களின் தலைமையில் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட சார்பில் இன்று காலை 10 மணியளவில் திருமங்கலம் தேவர் சிலை அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறவழிப் போராட்டம் நடந்தது. இதனால் திருமங்கலம் தேவர் சிலை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த வெளியூரிலிருந்து திருமங்கலம் வரும் பேருந்துகள் அனைத்தும் திருமங்கலம் வெளிவட்டச் சாலை (பைபாஸ்) மூலம் திருப்பிவிடப்பட்டது. மதுரையிலிருந்து திருமங்கலம் வரை வரும் நகரப் பேருந்துகள் அனைத்தும் மறவன்குளம் நான்கு வழிச்சாலை பாலம் அருகே நிறுத்தப்பட்டது. அதில் வந்த பொதுமக்கள் அனைவரையும் அங்கேயே இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து திருமங்கலம் பேருந்துநிலையம் வரை சுமார் 3 கிமீ தூரம் தங்களது உடைமைகளை தூக்கிக்கொண்டு நடந்து சென்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

For more details read here
www.tirumangalam.com

No comments:

Post a Comment