Tuesday, September 1, 2015

நகராட்சி துப்புரவாளர்கள் வேலை நிறுத்தத்தால் நாறுது திருமங்கலம் | Tirumangalam.com

திருமங்கலம், மேலுார் துப்புரவு தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், குப்பை அள்ளப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது




மே தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி விடுமுறை நாட்களுக்கு முழு நேர விடுப்பு வழங்குதல், சஸ்பெண்ட் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு, பழிவாங்கும் போக்கை கைவிடல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மேலுார், திருமங்கலம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.மதுரை கோச்சடையில் நகராட்சிகள் நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சம்மேளன மாநில குழு உறுப்பினர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இயக்குனர் (பொறுப்பு) கனகராஜிடம் மனு அளித்தனர். ராமசாமி கூறியதாவது: மேலுார், திருமங்கலம் நகராட்சிகளில், துப்புரவு பணிக்கு தலா 250 முதல் 300 பேர் தேவை. மேலுாரில் 58 பேர், திருமங்கலத்தில் 80 பேர் மட்டுமே உள்ளனர். விடுப்பில் செல்பவர்களை கழித்தால் பணியில் இருப்பவர்கள் சொற்பமே. துப்புரவு பணியாளர்களுக்கான கோரிக்கைகள் பல ஆண்டுகளாக நிறைவேற்றவில்லை. பேச்சுவார்த்தைக்கு இன்று (செப்.,1) வரும்படி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார் என்றார். மேலுார், திருமங்கலத்தில் குப்பை அள்ளாமல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை அகற்ற நகராட்சி கமிஷனர்கள் சுருளிநாதன், அப்துல்ரஷீத் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். பணியாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றனர்.
மேலும் படிக்க

No comments:

Post a Comment