Monday, August 31, 2015

40 ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடைத் திட்டம் கண்ட திருமங்கலம் | Tirumangalam.com

ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பே பாதாள சாக்கடைத் திட்டம் கண்ட நம்ம திருமங்கலம்





1970களின் இறுதியில் தமிழகத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், தேனி மாவட்டம் அல்லி நகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.. அதனைத் தொடர்ந்து நம்ம திருமங்கலத்திலும் பாதாள சாக்கடைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. திருமங்கல நகரின் அன்றைய முக்கிய வீதிகளான பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, பூச்சியார் தெரு, பசும்பொன் தெரு, காமராசர் தெரு ஆகியவற்றை இணைத்து திட்டம் உருவாக்கி செயல்படுத்தினர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அந்தந்த தெரு சந்திப்புகளில் அன்றைய காலத்து இரும்பு மூடிகள் தென்பட்டன. மேலும் படிக்க

Saturday, August 29, 2015

திருமங்கலம் பி.கே.என். பள்ளியின் பழைய புகைப்படங்களின் தொகுப்பு | Tirumangalam.com

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நூற்றாண்டு கண்ட பள்ளியான பி.கே.என் பள்ளியின் அழகிய பழைய அரிய புகைப்படத் தொகுப்பு கட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


இதனைச் சேகரித்து வழங்கிய திரு. சிவ சித்தார்த்தன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். இது போன்று தங்களிடமும் நம் திருமங்கலம் நகரின் பழைய புகைப்படத் தொகுப்புகள் இருப்பின் எங்களுக்கு அனுப்புங்கள். தங்களின் பெயருடன் நமது Tirumangalam.com இணைய தளத்தில் பதிவிடப்படும். தங்களது புகைப்படங்களை admin@tirumangalam.com எனும் இணையதள முகவரிக்கு அனுப்புங்கள்.

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

Friday, August 28, 2015

திருமங்கலம் நகர் மற்றும் தாலுகாவில் நாளை மின்தடை அறிவிப்பு | Tirumangalam.com

திருமங்கலம் துணை மின்நிலையத்தில் மின்சாரம் பெறும் திருமங்கலம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டரங்களில் நாளை (ஆக. 29) மின்தடை.
ிருமங்கலம் துணை மின்நிலையத்தில் வரும் 29ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் திருமங்கலம் நகர், உலகாணி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி, சித்தாலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது Read more

There will be a power shutdown in Tirumangalam, Ulagani, Sivarakottai, Melakottai, Mykudi, Sitthalai, Sathangudi, Puthupatti, Alampatti, Achampatti and its surroundings

Wednesday, August 26, 2015

திருமங்கலம் கக்கன் காலனி ஓடையில் பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம் | Tirumangalam.com

திருமங்கலம் கக்கன் காலனி ஓடை பகுதியில் நடைபாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறை தலையிட்டு சமாதானம் செய்தனர்.


திருமங்கலம் மறவன்குளம் கண்மாய் - குண்டாற்றை இணைக்கும் கால்வாயை சீர்செய்யும் பணி 11 கோடி ரூபாய் செலவில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றது.. இந்த கால்வாயை தாண்டித்தான் கக்கன் காலனி பகுதிக்கு செல்ல முடியும். கால்வாய் பணியின் காரணமாக இந்த பகுதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. கக்கன் காலனிக்கு நடந்து செல்ல ஆளுயர கால்வாய் தடுப்புச் சுவர் வழியாக இறங்கித் தான் செல்ல முடியும். ஆனால் வண்டியில் செல்ல என்.ஜி/ஓ. காலனி பாலம் வரை சுற்றிச் செல்ல வேண்டும். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் ஏற்பட்டது. கால்வாயை கடக்க கக்கன் காலனிக்கு புதிதாய் நடை பாலம் அமைத்துத் தரக்கோரி பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரியுள்ளனர். ஏற்கனவே பலமுறை போராட்டமும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் பாலம் அமைத்துத் தரக்கோரி இன்று காலை மீண்டும் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனம் செய்தனர். கக்கன் காலனி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நடை பாலம் அமையுமா? Read more



Tirumangalam Kakkan colony people protesting for a bridge across Maravankulam - Gundar canal.

திருமங்கலத்தில் ஏறத்தாழ 40 ஆண்டு காலமாய் நாத்திகரின் எதிரே ஆத்திகர் | Tirumangalam.com

தமிழகத்தின் (ஏன்.. இந்த உலகத்தில்) எங்கு சென்றாலும் காணக்கிடைக்கா பொக்கிஷம், திருமங்கலத்தில் அமைதியாய் ஏறத்தாழ 40 ஆண்டு காலமாய் உள்ளது.


இந்து மத கோட்பாடுகள் மற்றும் அதன் உணர்வுகளை தன உயிரினும் மேலாக மதித்து ஆத்திகராய் வாழ்ந்தவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. இராசகோபாலாச்சாரி (இராசாசி). ஆனால் அதற்கு நேர்மறையான சிந்தனை கொண்டு கடவுள் மறுப்பு இயக்கத்தைத் தலைமை தாங்கியவர் ஈ.வெ.இரா. பெரியார் அவர்கள். கொள்கைகளின் அடிப்படையில் இவ்விருவருமே வெவ்வேறு துருவங்களாய் நின்றவர்கள். அப்படிப்பட்ட இவர்களை திருமங்கலம் - மதுரை சாலையில் (திருமங்கலம் புறநகர் பேருந்து நிறுத்தத்திற்கு அருகே) நேரிதிரே சிலைகளாய் நிற்க வைத்தனர். இச்சிலைகள் நிறுவப்பட்டு ஏறத்தாழ 40 ஆண்டுகள் கழிந்த நிலையில் இன்றும் நீடித்து நிற்கின்றன. Read more

The Theist Mr Rajaji's statue infront of Atheist Mr. EVR Periyar's stuate in Tirumangalam

Tuesday, August 25, 2015

மதுரை மாவட்டத்தின் முதல் பன்னீர் சோடா தயாரித்த திருமங்கலம் வீனஸ் சோடா | Tirumangalam.com

மதுரை மாவட்டத்தில் பொன்விழா கண்டு தலைமுறை தாண்டி இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே கோலி சோடா நிறுவனம் நம்ம திருமங்கலம் வீனஸ் சோடா கம்பெனி என்பது எதனை பேருக்குத் தெரியும்? தெரிந்து கொள்ளுங்கள்.


திருமங்கலத்தில் ஆர். ஜெயமணி அவர்களின் முயற்சியால் தனது மாமாவின் சோடா கம்பெனியில் அனுபவம் பெற்று திருமங்கலத்தில் ஒரு சோடா கம்பெனியை ஆரம்பிக்கும் எண்ணம் தோன்றியது. அதற்காக தனது மனைவி திருமணத்திற்கு சீதனமாக கொண்டு வந்த 60 பவுன் நகை மற்றும் வீட்டிலுள்ள ஆடு மாடு கோழி என அனைத்தையும் விற்று 1957ம் ஆண்டு சூலை மாதம் 7ம் நாள் ரூ.2000 முதலீடாகக் கொண்டு வீனஸ் சோடா கம்பெனி என்ற ஒரு சிறு தொழிலாக திருமங்கலம் திருவள்ளுவர் தெருவில் செட்டியார் காம்பவுன்டில் ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் வெறும் கோலி சோடா மட்டும் தயாரிக்கப்பட்டு 1 சோடா, 1 அனாவிற்கு (6 காசுகள்) விற்கப்பட்டது. சோடாவின் தரத்தால், மக்கள் மத்தியில் வீனஸ் சோடா நற்பெயர் எடுக்க ஆரம்பித்தது. Read more


Madurai district's first corbonated rosewater soda was prepared by Thirumangalam Venus Soda Company

Monday, August 24, 2015

மறவன்குளம் அருகே ஓடும் இரயிலில் எட்டுப் பெட்டிகள் பிரிந்தது | Tirumangalam.com

திருமங்கலம் அருகே மறவன்குளம் அருகே ஓடும் இரயிலில் எட்டுப் பெட்டிகள் கழண்டன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி மாவட்டம் மீளவட்டானுக்கு சரக்கு ரயில் ஒன்று நேற்று காலை  சென்றது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த மறவன்குளம் அருகே சென்றபோது பின்னால் இருந்த 8 பெட்டிகள் தனியாக பிரிந்து நின்றன.  இதையடுத்து டிரைவர் ரயிலை நிறுத்தினார்.  தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவ்வழியகா வந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மதுரையில் இருந்து ரயில்வே ஊழியர்கள் வந்து பழுதாகி நின்ற சரக்கு பெட்டிகளை சரி செய்து, திருமங்கலம் ரயில் நிலையத்துக்கு  மெதுவாக  ஓட்டிச் சென்றனர். இதனை தொடர்ந்து நெல்லையில் இருந்து ஈரோடு மற்றும் மயிலாடுதுறைக்கு செல்லும் பயணிகள் ரயில், செங்கோட்டை - மதுரை  உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் சுமார் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு மதுரைக்குச் சென்றன.


Sensation near Thirumangalam 8 Compartments in a moving freight train gone split

For more details, Click here

Saturday, August 15, 2015

உச்சபட்டி நடுநிலைப் பள்ளியில் விடுதலை நாள் விழா கொண்டாட்டங்கள் | Tirumangalam.com

திருமங்கலம் வட்டம் உச்சப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 69வது விடுதலை நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.


பள்ளித் தலைமையாசிரியை திருமதி.சாந்தி அவர்கள் வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் திரு.கார்த்திகேயன் அவர்கள் கொடியேற்றி வைத்தார். மேலும் GAINTS அறகட்டளை தலைவர் திரு. மாதவன் அவர்கள் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்சிகள் சிறப்பாக நடைபெற்றன. விழாவில் பெற்றோர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் என கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Indian Independence Day has been celebrated in Uchapatti, Tirumangalam

For more details, Click here

Thursday, August 13, 2015

திருமங்கலம் அரசுப் பொது மருத்துவமனைக்கு புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை | Tirumangalam.com

திருமங்கலம் அரசுப் பொது மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான புதிய 108 ஆம்புலன்ஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது.


பச்சிளம் குழந்தைகள் உயிர்காக்கும் இன்குபேட்டர் கருவி, மானிட்டர் மற்றும் பல்வேறு வசதிகளோடு ரூ. 12 லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் வழங்கும் விழாவை அமைச்சர் திரு. செல்லூர் ராஜு தலைமை வகித்து மருத்துவமனைக்கு வழங்கினார். இவ்விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சுப்பிரமணியன், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு. முத்துராமலிங்கம், மருத்துவ இணை இயக்குனர் மாலதி, திருமங்கலம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திரு. பூமிநாதன், 108 ஆம்புலன்ஸ் மதுரை மண்டல மேலாளர் திரு. ஜீவராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.



Rs. 12 Lakhs worth of new Ambulance for infant babies has been bought in Tirumangalam Govt Hospital.

For more details, Click here

Wednesday, August 12, 2015

100 நாள் வேலை திட்டத்தில் கூலி வழங்காததால் மக்கள் சாலை மறியல் | Tirumangalam.com

திருமங்கலத்தில் இன்று காலை 100 நாள் வேலை திட்டத்தில் கூலி முறையாக வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


மேலக்கோட்டையிலிருந்து ஜிம்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிள் | Tirumangalam.com

ஜிம்பலக்கடி பம்பா ஆப்பிரிக்கா அங்கிளின் சொந்த ஊர், நம்ம திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டை தானாம்.


1980கள் மற்றும் 90களில் கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியுடன் நடித்தவர்களுள் ஒருவர் சுப்பையா. அக்காலத்தில் திரைத்துறையில் சுப்பையா என்று ஏற்கனவே இரண்டு பேர் இருந்ததால் இவரின் நிறத்தை வைத்து கருப்பு சுப்பையா என்று அழைக்கப்பட்டார். (மற்றொருவர் வெள்ளை சுப்பையா) 1980கள் மற்றும் 90களில் கவுண்டமணியுடனே ஏறத்தாழ 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலங்களில் எங்க ஊர் பாட்டுக்காரன், திருமதி பழனிச்சாமி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தாலும் பின்னர் வந்த படங்களான பெரிய மருது, செந்தூரப்பூவே, பட்டத்துராணி, ஜல்லிக்கட்டுக் காளை, கட்டபொம்மன் ஆகிய படங்களின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதிலும் ஜல்லிக்கட்டுக் காளை படத்தில் வரும் ஜம்பலக்கடி பம்பா எனும் கதாபாத்திரம், பெரிய மருது படத்தில் வரும் அண்டாவுக்கு ஈயம் பூசும் கதாபாத்திரம், கட்டபொம்மன் படத்தில் ஆயிரம் மூட்டை நெல் அரவை செய்ய வரும் கதாபாத்திரம் ஆகியவை இன்றைய இளைஞர்கள் முதற்கொண்டு இரசிக்கின்றனர்.


இவரது கடைசி காலங்களில் மிகவும் நோய்வாய்ப் பட்டு கடந்த 2013ம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரது சொந்த ஊர் - திருமங்கலம் தாலுகா, மேலக்கோட்டை கிராமம்.

For more details, Click here

Tuesday, August 11, 2015

இனி எந்த மின்சார வாரியத்திலும் மின் கட்டணம் செலுத்தலாம் | Tirumangalam.com

:தமிழகத்தில் எந்த நகரத்திலுள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்தும் கரண்ட் பில் கட்டும் முறை திருமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் நேற்று முதல் செயல்படத்துவங்கியது



தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு மண்டலத்திற்குள் கரண்ட் பில் அந்தந்த மண்டலத்திற்குரிய மின்வாரிய அலுவலகத்தில் மட்டுமே கட்டும் முறை இதுவரை நடைமுறையில் உள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலமாக எந்த இடத்திற்கும் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஏற்கனவே உள்ளது. திருமங்கலத்தில் மத்திய அரசு நிதி உதவியுடன், மின் விநியோக சீரமைப்பு திட்டத்தின் கீழ், புதிய மென் பொருள் மூலம் புதிய கணக்கீடு மற்றும் வசூல் பணிகள் துவக்கப்பட்டன.இதன் மூலம் எந்த மின்வாரிய அலுவலகத்திலும் மின் கட்டணம் செலுத்த முடியும்.. இந்த சாப்ட்வேர் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி மற்றும் திருமங்கலம்,  மேலூர், உசிலம்பட்டி ஆகிய மூன்று நகராட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. மதுரை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் நல்லம்மாள் துவக்கிவைத்தார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஈஸ்வர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் மகாராஜன், உதவி பொறியாளர்கள் பாலமுருகன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


For more details: Read here

Monday, August 10, 2015

திருமங்கலத்தில் திமுக.வினரின் மதுவிலக்கு அறவழிப் போராட்டம் | Tirumangalam.com


மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி திருமங்கலத்தில் திமுகவினர் அறவழிப் போராட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி திமுகவின் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட சார்பில் இன்று காலை 10 மணியளவில் திருமங்கலம் தேவர் சிலை அருகே அறவழிப் போராட்டம் நடந்தது. இதில் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதனை மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் திரு. பி. மூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார். மேலும் திரு.சேடபட்டி முத்தையா, திரு.மணிமாறன் மற்றும் திமுகவினர் பலர் பங்கேற்றனர்.

For more details read here
www.tirumangalam.com

திமுகவின் போராட்டத்தால் 3கிமீ பொதுமக்கள் நடந்து சென்ற அவலம் | Tirumangalam.com

திருமங்கலத்தில் திமுக நடத்திய மதுவிலக்குப் போராட்டத்தால் மதுரையிலிருந்து பேருந்தில் திருமங்கலம் வந்த பொதுமக்களை மறவன்குளம் நான்கு வழிச்சாலையில் இறக்கிவிடப்பட்டு, சுமார் 3 கிமீ நடந்து சென்றனர்


தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி திமுகவின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் திரு. பி. மூர்த்தி அவர்களின் தலைமையில் மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட சார்பில் இன்று காலை 10 மணியளவில் திருமங்கலம் தேவர் சிலை அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறவழிப் போராட்டம் நடந்தது. இதனால் திருமங்கலம் தேவர் சிலை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைக் கட்டுப்படுத்த வெளியூரிலிருந்து திருமங்கலம் வரும் பேருந்துகள் அனைத்தும் திருமங்கலம் வெளிவட்டச் சாலை (பைபாஸ்) மூலம் திருப்பிவிடப்பட்டது. மதுரையிலிருந்து திருமங்கலம் வரை வரும் நகரப் பேருந்துகள் அனைத்தும் மறவன்குளம் நான்கு வழிச்சாலை பாலம் அருகே நிறுத்தப்பட்டது. அதில் வந்த பொதுமக்கள் அனைவரையும் அங்கேயே இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து திருமங்கலம் பேருந்துநிலையம் வரை சுமார் 3 கிமீ தூரம் தங்களது உடைமைகளை தூக்கிக்கொண்டு நடந்து சென்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

For more details read here
www.tirumangalam.com

Sunday, August 9, 2015

கவனிப்பாரற்று கிடக்கும் தாலுகாவின் முதல் தேசியக் கொடி ஏற்றிய கம்பம் | Tirumangalam.com

திருமங்கலம் தாலுகாவில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றப்பட்ட கொடிக்கம்பம் கவனிப்பாரற்று கிடக்கின்றது.





1947ம் ஆண்டு ஆகத்து மாதம் 15ம் நாள் இந்திய நாடு சுதந்திரம் அடைந்தது. அதனைக் கொண்டாடும் வகையில் இந்திய நகரங்கள், கிராமங்கள் என எல்லா இடங்களிலும் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அவ்வாறு நம் திருமங்கலம் தாலுகாவின் (இன்றைய திருமங்கலம் தாலுகா & பேரையூர் தாலுகா) முதன்முறையாக தேசியக் கொடி திருமங்கலம் நகராட்சி அலுவலக வளாகத்தில் (தற்போதைய திருமங்கலம் அரசு பொது மருத்துவமனை) ஏற்றப்பட்டு அனுசரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளிலும் திருமங்கலம் நகராட்சித் தலைவர் இந்திய சுதந்திர நாளன்று தேசியக் கொடி ஏற்றுவது வழக்கமாய் இருந்து வந்தது. 1970களின் இறுதியில் நகராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பழைய கொடிக்கம்பத்தில் கொடியேற்றுவது நிறுத்தப்பட்டது. தற்போதைய திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் பின் பகுதியில் கம்பம் மறைவாக உள்ளதால் பெரும்பாலும் பொதுமக்கள் இதனை கவனிப்பதில்லை.

இன்று அக்கொடிக்கம்பமும் வெறும் கல்வெட்டையும், நினைவுகளையும் சுமந்து நிற்கிறது. எதிர்வரும் சுதந்திர நாளில் இதனை கண்டுகொள்ளுமா திருமங்கலம் நகராட்சி?

For more details read here
www.tirumangalam.com