Sunday, August 9, 2015

கவனிப்பாரற்று கிடக்கும் தாலுகாவின் முதல் தேசியக் கொடி ஏற்றிய கம்பம் | Tirumangalam.com

திருமங்கலம் தாலுகாவில் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றப்பட்ட கொடிக்கம்பம் கவனிப்பாரற்று கிடக்கின்றது.





1947ம் ஆண்டு ஆகத்து மாதம் 15ம் நாள் இந்திய நாடு சுதந்திரம் அடைந்தது. அதனைக் கொண்டாடும் வகையில் இந்திய நகரங்கள், கிராமங்கள் என எல்லா இடங்களிலும் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அவ்வாறு நம் திருமங்கலம் தாலுகாவின் (இன்றைய திருமங்கலம் தாலுகா & பேரையூர் தாலுகா) முதன்முறையாக தேசியக் கொடி திருமங்கலம் நகராட்சி அலுவலக வளாகத்தில் (தற்போதைய திருமங்கலம் அரசு பொது மருத்துவமனை) ஏற்றப்பட்டு அனுசரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளிலும் திருமங்கலம் நகராட்சித் தலைவர் இந்திய சுதந்திர நாளன்று தேசியக் கொடி ஏற்றுவது வழக்கமாய் இருந்து வந்தது. 1970களின் இறுதியில் நகராட்சி அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பழைய கொடிக்கம்பத்தில் கொடியேற்றுவது நிறுத்தப்பட்டது. தற்போதைய திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் பின் பகுதியில் கம்பம் மறைவாக உள்ளதால் பெரும்பாலும் பொதுமக்கள் இதனை கவனிப்பதில்லை.

இன்று அக்கொடிக்கம்பமும் வெறும் கல்வெட்டையும், நினைவுகளையும் சுமந்து நிற்கிறது. எதிர்வரும் சுதந்திர நாளில் இதனை கண்டுகொள்ளுமா திருமங்கலம் நகராட்சி?

For more details read here
www.tirumangalam.com

No comments:

Post a Comment