Sunday, April 24, 2016

திருமங்கலம் தொகுதி காங். வேட்பாளர் ஜெயராமனை ஆதரித்து செயல்வீரர் கூட்டம் | Tirumangalam.com

திருமங்கலம் தொகுதி காங். வேட்பாளர் ஜெயராமனை ஆதரித்து திமுக - காங். கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம்
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. ஜெயராமன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் திருமங்கலம் வி.எஸ்.ஆர். மகாலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக - காங். கட்சிகளின் மதுரை மாவட்ட பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். read more

Tirumangalam.com

அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி திருமங்கலம் வேட்பாளர் அறிவிப்பு | Tirumangalam.com

அப்துல்கலாம் இலட்சிய கட்சியின் திருமங்கலம் சட்டமன்றத்திற்கான வேட்பாளர் அறிவிப்பு
திரு. அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், அப்துல்கலாம் இலட்சிய இந்தியா எனும் ஓர் அரசியல் கட்சியை சில மாதங்களுக்கு முன்பு துவக்கினார். நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தனியாக களம்காணப் போவதாக அறிவித்த திரு. பொன்ராஜ், தேர்தலுக்கான சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக ஐ.டி.ஐ படித்த திரு. எம். சுப்புராஜ் (வயது 45) அவர்கள் போட்டியிடவுள்ளார். read more

Thursday, April 21, 2016

ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேதி அறிவிப்பு | Tirumangalam.com

திருமங்கலம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேதி அறிவிப்பு
 திருமங்கலம் பி.கே.என். உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளி மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் ஞாயிறன்று துவங்கி 13 நாட்கள் வைகாசி திருவிழா கொண்டாடப்படும். இவ்வாண்டும் வரும் மே மாதம் 8ம் நாள் பூச்சொரிதலும் அதனை தொடர்ந்து மே 15ம் தேதி முதல் திருவிழா துவங்கவுள்ளது. Read more

www.Tirumangalam.com

Tuesday, April 19, 2016

காட்டு மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா 5ம் நாள் அலங்காரம் | Tirumangalam.com

திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஐந்தாம் நாள் காமதேனு வாகனத்தில் நகர்வலம்

திருமங்கலம் அருள்மிகு காட்டு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று காட்டு மாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் நடைபெற்றது. Read more

www.tirumangalam.com

திருமங்கலம் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் | Tirumangalam.com

திருமங்கலம் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் இனிதே முடிந்தது
மதுரை மீனாட்சியம்மனுக்கு தாலி செய்து கொடுத்ததாக நம்பப்படுகின்ற திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் வெகுசிறப்பாய் நடந்து முடிந்தது. Read more

www.tirumangalam.com

Monday, April 18, 2016

நக்கீரர் பிறந்த ஊர் தெரியுமா உங்களுக்கு? | Tirumangalam.com

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றுரைத்த புலவர் நக்கீரர் பிறந்த ஊர் தெரியுமா உங்களுக்கு?
சங்ககால புலவர் நக்கீரர் பிறந்த பெருமைக்குரிய ஊர்

தமிழகத்தில் இதிகாசங்கள், புராணங்கள், மன்னர்கால வரலாறுகள் என பல உள்ளன. சங்ககாலம் என்பது மதுரைக்கு பொருந்தும். பல ஆயிரம் ஆண்டுகள் கொண்ட நாகரிகம் உடையது பாண்டிய மன்னர்கள் வரலாறு. அதில் சிவனின் திருவிளையாடல் ஒன்று. அப்போது தான் தமிழ் வளர்த்த புலவர் கள் ஏராளமாக இருந்துள்ளனர். மங்கையர் கூந்தலுக்கு இயற்கை மணமா அல்லது செயற்கை மணமா என்ற பாண்டிய மன்னரின் சந்தேகத்தை தீர்க்க சிவனே புலவர் வடிவில் வந்து வாதம் புரிந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அந்த வாதத்திற்குரியவர் தான் நக்கீரர் என்ற தமிழ்ப் புலவர். முருகன் மீது பக்தி கொண்டு திருமுருகாற்றுப்படை இயற்றியவர்.

அந்த சங்க கால புலவர் பிறந்த இடமாக கூறப்படுவது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் இருந்து சேடபட்டி செல்லும் வழியில் உள்ள திரளி கிராமமாகும். பழமையின் அடையாளங்கள் இந்த கிராமம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் உள்ள இடத்தின்அருகே இருந்தது. காலப்போக்கில் அழிந்துபோய் அதன் அருகே நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்து உள்ளது. ஊர் இருந்ததற்கான அடையாளமாக மிகப்பெரிய மண்மேடு இருந்துள்ளது. தற்போது மேடு சிறிய அளவில் உள்ளது. அதைசுற்றி நிலமாக்கி விவசாயம் செய்து வருகின்றனர். நிலத்தை உழும்போது இப்போதும் பூமிக்கடியின் இருந்து மண்பானைகள், கட்டிட கற்கள், கிடைப்பதாக கூறப்படுகிறது. அதன் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. மிகச்சிறிய அம்மியும் நிலத்தில் இருந்து எடுத்துள்ளனர். கண்மாய்க்குள் சிறிய செங்கற்களால் கட்டப்பட்ட கிணறு ஒன்று புதர் மண்டி கிடக்கிறது. கண்மாய்கரை ஓரம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய முள்புதர் உள்ளது. அங்கு சென்று பார்த்தால், உடைந்த பழங்கால மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள் காணப்படுகின்றன. Read more