Saturday, June 11, 2016

புறக்காவல் நிலையம் அமையுமா திருமங்கலம் இரயில் நிலையத்தில்? | Tirumangalam.com

கொடைரோடு, திருவில்லிப்புதூர் போன்று திருமங்கலம் இரயில் நிலையத்தில் புறக்காவல் நிலையை அமையுமா?

திருமங்கலம் பகுதியில் ரயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போர் மற்றும் ரயிலில் பாய்ந்து தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வாரத்தில் குறைந்து 3 அல்லது 4 பேர் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக திருமங்கலம் மேலக்கோட்டை, மறவன்குளம், கூழையாபுரம், பாண்டியன் நகர் பகுதிகளில் அடிக்கடி ரயிலில் அடிப்பட்டு உயிரிழக்கின்றனர்.

இதேபோல, திருப்பரங்குன்றம் பகுதியிலும் ரயிலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் உடல்களை மீட்க, விருதுநகர் அல்லது மதுரையில் இருந்துதான் ரயில்வே போலீசார் வரவேண்டியுள்ளது. திருமங்கலம் ரயில் நிலையத்தை கடந்து விபத்து நடந்தால் விருதுநகரிலில் இருந்து ரயில்வே போலீசார் வரவேண்டும். மதுரை-திருமங்கலம் ரயில் நிலைய கட்டுப்பாட்டு பகுதியில் விபத்து நடந்தால், மதுரையில் இருந்து ரயில்வே போலீசார் வரவேண்டும். ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தால், எல்லைப் பிரச்னயால், இறந்தோரின் உடலைப் பெறுவதற்குள் Read more

 Tirumangalam.com

Sunday, May 8, 2016

திருமங்கலம் தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்

திருமங்கலம் சட்டமன்ற தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரியாக மாற்றுவேன் என அஇஅதிமுகவின் திருமங்கலம் தொகுதி வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் உறுதியளித்துள்ளார்
திருமங்கலம் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் வீடுவீடாக அதிமுக திருமங்கலம் வேட்பாளர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அவர், மூன்று துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளதால் அரசிடம் இருந்து தேவையான நலத்திட்டங்கள் வாங்கிக் கொடுப்பேன் எனவும் கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து திட்டங்களையும் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார். தற்போது அவர் அறிவித்த பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற திட்டங்கள் கிடைக்க அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். Read more

Tirumangalam.com

I will make Tirumangalam constituency as a role model of Tamil Nadu if I got victory

Sunday, April 24, 2016

திருமங்கலம் தொகுதி காங். வேட்பாளர் ஜெயராமனை ஆதரித்து செயல்வீரர் கூட்டம் | Tirumangalam.com

திருமங்கலம் தொகுதி காங். வேட்பாளர் ஜெயராமனை ஆதரித்து திமுக - காங். கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம்
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. ஜெயராமன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் திருமங்கலம் வி.எஸ்.ஆர். மகாலில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக - காங். கட்சிகளின் மதுரை மாவட்ட பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். read more

Tirumangalam.com

அப்துல்கலாம் இலட்சிய இந்தியா கட்சி திருமங்கலம் வேட்பாளர் அறிவிப்பு | Tirumangalam.com

அப்துல்கலாம் இலட்சிய கட்சியின் திருமங்கலம் சட்டமன்றத்திற்கான வேட்பாளர் அறிவிப்பு
திரு. அப்துல்கலாமின் ஆலோசகர் பொன்ராஜ், அப்துல்கலாம் இலட்சிய இந்தியா எனும் ஓர் அரசியல் கட்சியை சில மாதங்களுக்கு முன்பு துவக்கினார். நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தனியாக களம்காணப் போவதாக அறிவித்த திரு. பொன்ராஜ், தேர்தலுக்கான சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக ஐ.டி.ஐ படித்த திரு. எம். சுப்புராஜ் (வயது 45) அவர்கள் போட்டியிடவுள்ளார். read more

Thursday, April 21, 2016

ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேதி அறிவிப்பு | Tirumangalam.com

திருமங்கலம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தேதி அறிவிப்பு
 திருமங்கலம் பி.கே.என். உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட பத்திரகாளி மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் ஞாயிறன்று துவங்கி 13 நாட்கள் வைகாசி திருவிழா கொண்டாடப்படும். இவ்வாண்டும் வரும் மே மாதம் 8ம் நாள் பூச்சொரிதலும் அதனை தொடர்ந்து மே 15ம் தேதி முதல் திருவிழா துவங்கவுள்ளது. Read more

www.Tirumangalam.com

Tuesday, April 19, 2016

காட்டு மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா 5ம் நாள் அலங்காரம் | Tirumangalam.com

திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா ஐந்தாம் நாள் காமதேனு வாகனத்தில் நகர்வலம்

திருமங்கலம் அருள்மிகு காட்டு மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று காட்டு மாரியம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி நகர்வலம் நடைபெற்றது. Read more

www.tirumangalam.com

திருமங்கலம் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் | Tirumangalam.com

திருமங்கலம் அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் இனிதே முடிந்தது
மதுரை மீனாட்சியம்மனுக்கு தாலி செய்து கொடுத்ததாக நம்பப்படுகின்ற திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் வெகுசிறப்பாய் நடந்து முடிந்தது. Read more

www.tirumangalam.com

Monday, April 18, 2016

நக்கீரர் பிறந்த ஊர் தெரியுமா உங்களுக்கு? | Tirumangalam.com

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றுரைத்த புலவர் நக்கீரர் பிறந்த ஊர் தெரியுமா உங்களுக்கு?
சங்ககால புலவர் நக்கீரர் பிறந்த பெருமைக்குரிய ஊர்

தமிழகத்தில் இதிகாசங்கள், புராணங்கள், மன்னர்கால வரலாறுகள் என பல உள்ளன. சங்ககாலம் என்பது மதுரைக்கு பொருந்தும். பல ஆயிரம் ஆண்டுகள் கொண்ட நாகரிகம் உடையது பாண்டிய மன்னர்கள் வரலாறு. அதில் சிவனின் திருவிளையாடல் ஒன்று. அப்போது தான் தமிழ் வளர்த்த புலவர் கள் ஏராளமாக இருந்துள்ளனர். மங்கையர் கூந்தலுக்கு இயற்கை மணமா அல்லது செயற்கை மணமா என்ற பாண்டிய மன்னரின் சந்தேகத்தை தீர்க்க சிவனே புலவர் வடிவில் வந்து வாதம் புரிந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அந்த வாதத்திற்குரியவர் தான் நக்கீரர் என்ற தமிழ்ப் புலவர். முருகன் மீது பக்தி கொண்டு திருமுருகாற்றுப்படை இயற்றியவர்.

அந்த சங்க கால புலவர் பிறந்த இடமாக கூறப்படுவது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் இருந்து சேடபட்டி செல்லும் வழியில் உள்ள திரளி கிராமமாகும். பழமையின் அடையாளங்கள் இந்த கிராமம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் உள்ள இடத்தின்அருகே இருந்தது. காலப்போக்கில் அழிந்துபோய் அதன் அருகே நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்து உள்ளது. ஊர் இருந்ததற்கான அடையாளமாக மிகப்பெரிய மண்மேடு இருந்துள்ளது. தற்போது மேடு சிறிய அளவில் உள்ளது. அதைசுற்றி நிலமாக்கி விவசாயம் செய்து வருகின்றனர். நிலத்தை உழும்போது இப்போதும் பூமிக்கடியின் இருந்து மண்பானைகள், கட்டிட கற்கள், கிடைப்பதாக கூறப்படுகிறது. அதன் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. மிகச்சிறிய அம்மியும் நிலத்தில் இருந்து எடுத்துள்ளனர். கண்மாய்க்குள் சிறிய செங்கற்களால் கட்டப்பட்ட கிணறு ஒன்று புதர் மண்டி கிடக்கிறது. கண்மாய்கரை ஓரம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய முள்புதர் உள்ளது. அங்கு சென்று பார்த்தால், உடைந்த பழங்கால மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள் காணப்படுகின்றன. Read more