Wednesday, August 26, 2015

திருமங்கலம் கக்கன் காலனி ஓடையில் பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம் | Tirumangalam.com

திருமங்கலம் கக்கன் காலனி ஓடை பகுதியில் நடைபாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறை தலையிட்டு சமாதானம் செய்தனர்.


திருமங்கலம் மறவன்குளம் கண்மாய் - குண்டாற்றை இணைக்கும் கால்வாயை சீர்செய்யும் பணி 11 கோடி ரூபாய் செலவில் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றது.. இந்த கால்வாயை தாண்டித்தான் கக்கன் காலனி பகுதிக்கு செல்ல முடியும். கால்வாய் பணியின் காரணமாக இந்த பகுதி முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. கக்கன் காலனிக்கு நடந்து செல்ல ஆளுயர கால்வாய் தடுப்புச் சுவர் வழியாக இறங்கித் தான் செல்ல முடியும். ஆனால் வண்டியில் செல்ல என்.ஜி/ஓ. காலனி பாலம் வரை சுற்றிச் செல்ல வேண்டும். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமம் ஏற்பட்டது. கால்வாயை கடக்க கக்கன் காலனிக்கு புதிதாய் நடை பாலம் அமைத்துத் தரக்கோரி பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் கோரியுள்ளனர். ஏற்கனவே பலமுறை போராட்டமும் நடத்தியுள்ளனர். இந்நிலையில் பாலம் அமைத்துத் தரக்கோரி இன்று காலை மீண்டும் போராட்டம் நடத்தினர். தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதனம் செய்தனர். கக்கன் காலனி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நடை பாலம் அமையுமா? Read more



Tirumangalam Kakkan colony people protesting for a bridge across Maravankulam - Gundar canal.

No comments:

Post a Comment