Thursday, September 10, 2015

துரித கட்டுமானப் பணிகள் நடைபெறும் திருமங்கலம் அரசு கலைக் கல்லூரி | Tirumangalam.com

திருமங்கலம் தியாகராசர் மில் எதிரே கட்டப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரிக்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. எதிர்வரும் கல்வியாண்டுக்குள் முடிக்கப்பட்டு திறக்கப்படலாம்.
திருமங்கலம் மற்றும் அதன் தாலுகா மக்களின் நீண்டநாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி, தமிழக அரசால் கடந்த 2012ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒரு பகுதியாய் செயல்படத் துவங்கியது. மறுபுறம் கல்லூரிக்கான கட்டிடம் அமைக்க நிலங்கள் கப்பலூர், தியாகராசர் மில் எதிரே அரசு கால்நடை பராமரிப்பு அலுவலகத்தின் அருகே தெரிவு செய்யப்பட்டன. கட்டிடம் கட்ட 2014 ஆண்டு செப். 23ம் நாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் காணொளிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். மேலும் கல்லூரி கட்டுவதற்காக 7 கோடியே 25 லட்சம் ரூபாயும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டது. கட்டிடப்பணிகள் ஆரம்பித்து ஏறத்தாழ ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றது. எப்படியும் வரும் 2016 கல்வியாண்டிற்குள் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

The construction work for Thirumangalam Govt Arts College is in full swing. Read more

No comments:

Post a Comment