Monday, April 18, 2016

நக்கீரர் பிறந்த ஊர் தெரியுமா உங்களுக்கு? | Tirumangalam.com

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றுரைத்த புலவர் நக்கீரர் பிறந்த ஊர் தெரியுமா உங்களுக்கு?
சங்ககால புலவர் நக்கீரர் பிறந்த பெருமைக்குரிய ஊர்

தமிழகத்தில் இதிகாசங்கள், புராணங்கள், மன்னர்கால வரலாறுகள் என பல உள்ளன. சங்ககாலம் என்பது மதுரைக்கு பொருந்தும். பல ஆயிரம் ஆண்டுகள் கொண்ட நாகரிகம் உடையது பாண்டிய மன்னர்கள் வரலாறு. அதில் சிவனின் திருவிளையாடல் ஒன்று. அப்போது தான் தமிழ் வளர்த்த புலவர் கள் ஏராளமாக இருந்துள்ளனர். மங்கையர் கூந்தலுக்கு இயற்கை மணமா அல்லது செயற்கை மணமா என்ற பாண்டிய மன்னரின் சந்தேகத்தை தீர்க்க சிவனே புலவர் வடிவில் வந்து வாதம் புரிந்ததாக திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அந்த வாதத்திற்குரியவர் தான் நக்கீரர் என்ற தமிழ்ப் புலவர். முருகன் மீது பக்தி கொண்டு திருமுருகாற்றுப்படை இயற்றியவர்.

அந்த சங்க கால புலவர் பிறந்த இடமாக கூறப்படுவது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் இருந்து சேடபட்டி செல்லும் வழியில் உள்ள திரளி கிராமமாகும். பழமையின் அடையாளங்கள் இந்த கிராமம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் உள்ள இடத்தின்அருகே இருந்தது. காலப்போக்கில் அழிந்துபோய் அதன் அருகே நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்து உள்ளது. ஊர் இருந்ததற்கான அடையாளமாக மிகப்பெரிய மண்மேடு இருந்துள்ளது. தற்போது மேடு சிறிய அளவில் உள்ளது. அதைசுற்றி நிலமாக்கி விவசாயம் செய்து வருகின்றனர். நிலத்தை உழும்போது இப்போதும் பூமிக்கடியின் இருந்து மண்பானைகள், கட்டிட கற்கள், கிடைப்பதாக கூறப்படுகிறது. அதன் சிதறல்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. மிகச்சிறிய அம்மியும் நிலத்தில் இருந்து எடுத்துள்ளனர். கண்மாய்க்குள் சிறிய செங்கற்களால் கட்டப்பட்ட கிணறு ஒன்று புதர் மண்டி கிடக்கிறது. கண்மாய்கரை ஓரம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பெரிய முள்புதர் உள்ளது. அங்கு சென்று பார்த்தால், உடைந்த பழங்கால மண் பாண்டங்களின் உடைந்த பாகங்கள் காணப்படுகின்றன. Read more

No comments:

Post a Comment